கடகம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

தொழில் வியாபாரத்தில் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும்.
Kadagam
Published on: 

கடகம்

நிம்மதியுடன் செயல்படும் வாரம். தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, கேது சேர்க்கை உள்ளது. பணம் வரும் வாய்ப்பு அதிகரிக்கும். கட்டுமான தொழில் நிறுவனங்கள், ரியல் எஸ்டேட் துறையினர் கை நிறைய பணத்தைப் பார்ப்பார்கள் நிலம், கட்டிடம் வாங்கி விற்பதில் சாதனை படைப்பார்கள். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு நகைகள் வாங்கி சேமிப்பீர்கள். நீண்ட காலமாக வராமல் இருந்த பணம் கைக்கு சேரும். வீடு, நிலம் வாங்குவீர்கள். உடல் நலம் சீராகும். தொழில் வியாபாரத்தில் எதிர்ப்புகளை சமாளிக்கும் ஆற்றல் அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு வந்தாலும் சிந்தித்து செயல்பட வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தீபாவளியை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன் ஏற்பாடுகளை செய்வீர்கள். புதிய நண்பர்களின் நட்பு ஏற்படும். உறவினர்கள், நண்பர்கள் ஆதரவு மனக்கவலைக்கு மருந்தாக அமையும். வேலையாட்களால் உருவாகிய பிரச்சனை சீராகும். ஆரோக்கிய குறைபாடு அகலும். சக்திக்கு மீறிய கடன் தேவையற்ற பேச்சை குறைத்து இறை வழிபாட்டில் கவனம் செலுத்தவும். சாதுக்களுக்கு தீபாவளியை முன்னிட்டு ஆடை தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X