

அன்பான கடக ராசியினரே! திருக்கணித பஞ்சாங்கப்படி 5.12.2026 அன்று முதல் ஜென்ம ராசிக்குள் கேது பகவானும் சம சப்தம ஸ்தானத்திற்குள் ராகு பகவானும் நுழைகிறார்கள். இந்த ஒன்றரை ஆண்டில் சனிபகவான் மீனம் மற்றும் மேஷ ராசியில் சஞ்சரிப்பார். குருபகவான் கடகம், சிம்மம் , கன்னி ஆகிய ராசிகளில் பயணிப்பார்.
நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள், வாழ்க்கை துணையை பற்றி கூறும் சம சப்தம ஸ்தானத்திற்குள் நுழையும் ராகு தனது பகை வீட்டிற்கு செல்கிறார்.ராகு தான் நின்ற பாவக பலனை பிரமாண்டப்படுத்தி தருவார். பிரகாசமான எதிர்காலம் உருவாகும். சமுதாய அங்கீகாரம் அதிகமாகும்.புதிய நண்பர்கள் அறிமுகம் ஆவார்கள்.சிலர் புதிய கூட்டுத் தொழில் துவங்குவார்கள்.பிரிந்து வாழ்ந்த தம்பதியர்கள் சேர்ந்து வாழ ஆசைப்படுவார்கள். புதிய தொழில் பார்ட்னர்கள் வரலாம். பழைய பார்ட்னர்கள் வெளியேறலாம். திருமணமான தம்பதிகளுக்குள் கருத்து வேற்றுமை அதிகமாகும்.சிலருக்கு வாழ்க்கையில் பல்வேறு சங்கடங்கள் உருவாகி மனநிலை பாதிக்கும்.காதல் கலப்பு திருமணம் அதிகமாக இருக்கும். சிலருக்கு மறு விவாகம் நடக்கும். திருமணமான தம்பதிகள் மகிழ்ச்சியாக இருந்தாலும் சம்மந்திகளின் சண்டையால் தம்பதிகளுக்கு மன வருத்தம் ஏற்படும். கூடா நட்பு கேடில் முடியும் என்பதால் எந்த வயதினராக இருந்தாலும் மனக் கட்டுப்பாட்டை இழந்து காதல் வலையில் சிக்குவார்கள். இரண்டாவது குழந்தை பிறக்கும்.
கடக ராசிக்கு 5,10ம் அதிபதியான அவிட்டம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் எதிர் கால சிந்தனை மிகுதியாக இருக்கும்.உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி ,ஊதிய உயர்வும் கிடைப்பதில் தடை தாமதம் இருக்கும். வேறு வேலைக்கு சென்று விடலாம் என்ற நினைப்பு மேலேங்கும் .அரசு ஊழியர்கள் லஞ்சம் சார்ந்த விஷயங்களை தவிர்க்க வேண்டும்.ஆண் வாரிசு இருப்பவர்களுக்கு பெண் குழந்தை இல்லை என்ற ஏக்கம் இருக்கும். பெண் குழந்தை இருப்பவர்களுக்கு ஆண் வாரிசு இல்லை என்ற கவலை மேலோங்கும் அல்லது அடுத்த தலைமுறையை தலைக்கச் செய்ய முடியவில்லையே என்ற ஆதங்கம் அதிகமாக இருக்கும். ஜோதிடம் மற்றும் மாந்தரீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். மொத்தத்தில் மனக்குறை மிகுதியாகும் காலம்.
கடக ராசிக்கு ராசி அதிபதியான சந்திரனின் சுய திருவோணம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் தனக்கு தான் எல்லாம் தெரியும் என்ற எண்ணம் அதிகரிக்கும். தவறான சுய முடிவு எடுத்து சில சிக்கல்களை சந்திக்கலாம். புகழ் அந்தஸ்து கௌரவத்தை அதிகரிக்க குறுக்கு வழியில் முயற்சிக்கலாம். மிகுதியான பொருள் ஆசையை கொடுப்பார்கள்.சந்திரன் மனசு, ராகு தவறான செயலை தூண்டுபவர். ராகுவின் தாக்கத்தால் மனம் தன் தொழில் ஞானத்தை மறக்கும். பரம்பரையாக கவுரவத் தொழில் செய்பவர்கள்த தொழில் தொடர்பான நல்ல முடிவை எடுக்கிறோம் என்று நினைத்து தவறான முடிவை எடுக்க வைக்கும் காலம்.அதிர்ஷ்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வருமானத்தை அதிகரிக்கும் எண்ணம் தோன்றும்.
கடக ராசிக்கு தன ஸ்தான அதிபதியான சூரியனின் உத்திராடம் நட்சத்திர சாரத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கும் காலம் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் பேச்சை குறைக்க வேண்டிய நேரம். பேச்சை மூலதனமாக கொண்டவர்களின் வாழ்வாதாரம் பல மடங்கு உயரும்.கொடுக்கல் வாங்கல்களில் மிகுந்த கவனம் தேவை மிகப் பெரிய பண பரிவர்த்தனைக்கு உரிய ஆவணங்களை கவனமாக வைத்திருக்க வேண்டும். கிரகங்கள் தன் கடமையை செய்யும். யாரையும் விட்டு வைக்காது. ஜனன கால ஜாதகத்தில் தசாபுத்தி சாதகமாக இருந்தால் எந்த பாதகமும் ஏற்படாது. நம்பிக்கை மிக முக்கியம். எந்த கை உங்களை விட்டாலும் உங்களின் நம்பிக்கை உங்களை கைவிடாது.
கேது ஒரு ஆன்மீக கிரகம் .பல ஞானிகள், யோகிகள், தவசீலர்கள் உருவாகக் காரணமாக இருக்கும் கிரகமாகும்.உங்ளின் செயல்பாடுகள், எண்ணங்களை மாற்றுவீர்கள். துறவறம் பற்றிய ஆழ் மனதில் எண்ணம், சிந்தனை இருக்கும். சிலர் இல்லற துறவியாகுவார்கள்.ஆன்மீக இயக்கத்தில் இணைந்து பொதுப் பணியாற்றுவீர்கள். பணம் செல்வாக்கை விரும்பாத கிரகம் கேது என்பதால் பணம், செல்வாக்கு இருந்தாலும் ஆடம்பரத்தை விரும்பாதவராக மாறிவிடுவார்கள். பேராசை படுவர்களுக்கு தீராப் பகை, மீளாக் கடன், தீராத வியதி, மாளாத பிரச்சனைகளில் ஜென்ம கோட்சார கேது சிக்க வைப்பார்.சட்டத்தை மதித்து நியாயமான எண்ணத்துடன் இருப்பவர்களுக்கு பெயர், புகழ், அங்கீகாரம், பணம், அந்தஸ்து அனைத்தையும் கொடுத்து கௌரவிப்பார். அதனால் ஜென்ம கேதுவை முறையாக பயன்படுத்தி வெற்றியை பெருக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
கடக ராசிக்கு 3,12 ஆம் அதிபதியான புதனின் ஆயில்யம் நட்சத்திரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் மூன்றாமிடம் என்பது உப ஜெய ஸ்தானம் வெற்றி மற்றும் புகழுக்குரிய இடம். இதில் அமரும் கேது நியாயமற்ற புகழ், வெற்றிக்கு ஆசைப்பட்டால் அதை மட்டுப்படுத்துவார். வீரம் பங்கப்படும். தைரியக் குறைவு உண்டு. மன பலம் குறையும். ஞாபகசக்தி குறையும். இளைய சகோதரருக்கு ENT பிரச்சனைக்கு வைத்தியம் செய்ய நேரும். உங்களுடை தாய்மாமா சகோதருடனான கருத்து வேறுபாட்டை மிகுதிப்படுத்தி இன்பம் காண்பார். சகோதரரின் ஜாமீன் மற்றும் கடன் பிரச்சனை உங்களை பாதிக்கும்.சொத்து அடமானத்தின் பெயரில் கடன் பெற நேரும். கேட்ட, கேட்காத இடத்தில் கடன் கிடைக்கும். தேவைக்கு அதிகமாக கடன் வாங்கினால் திருப்பி கட்ட முடியாமல் பகை உருவாகும். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்பு ஏற்படும். உஷ்ணம் மற்றும் அடிவயிறு தொடர்பான நோய்கள் மிரட்டி எடுக்கும். துக்கம் மிகுதியால் தூக்கம் குறையும்.
கடக ராசிக்கு 7, 8 ஆம் அதிபதியான சனி பகவானின் பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் தொழில் உத்தியோக நிமித்தம் காரணமாக தம்பதிகள் பிரிந்து வாழலாம். வம்பு வழக்குகளில் இருந்து நிரந்தர தீர்வு கிடைக்கும்.ஓய்வு ஊதிய பணம் காப்பீட்டு பணம் போன்ற அதிர்ஷ்ட பணங்கள் சேரலாம். உங்களின் பிற்கால தேவைக்காக அசையும் அசையா சொத்துகளில் முதலீடு செய்வீர்கள்.சிலர் புதியதாக இன்சூரன்ஸ் போடலாம். பிள்ளை இல்லாத சொத்து வாரிசு சொத்து உயில் சொத்து அதிர்ஷ்ட பணம் பொருள் ஆகியவற்றின் மேல் ஆர்வம் கூடும்.இரண்டு, ஐந்து , பதினொன்றாம் இடத்துடன் சம்மந்தம் பெறும் கிரகங்களின் தசா - புத்தி காலமாக இருந்தால் அதிர்ஷ்ட பொருள் வரவு உண்டு. திருமணத்தின் போது நல்ல சீருடன் வரன் அமையும். வாழ்க்கை துணை மூலம் பொருள் பணவரவு ஜீவனாம்சம் எதிர்பார்க்கலாம்.
கடக ராசிக்கு 6 9 ஆம் அதிபதியான குருவின் புனர்பூசம் நட்சத்திர சாரத்தில் கேது பகவான் சஞ்சரிக்கும் காலம் பூர்வ புண்ணியம் வினைப் படி நீங்கள் அனுபவிக்க வேண்டிய அனைத்து சுப பலன்களையும் நியாயமானதாக இருந்தால் நடந்து விடும். இள வயது கடக ராசியினருக்கு தாய், தந்தையாகும் பாக்கியம் கிடைக்கும். வயதானவர்களுக்கு தாத்தா பாட்டி என்ற பதவி உயர்வு கிடைக்கும். ஒரு சிலர் குழந்தை பிறப்பிற்கான மருத்துவம் எடுப்பார்கள். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு பணவரவு, அதிர்ஷ்டம் அதிகமாகும். ஆன்மீக இயக்கங்களில் முக்கிய பொறுப்புகள் கிடைக்கும். பலருக்கு வேற்று மதத்தின் மேல் நாட்டம் அதிகரிக்கும். மாற்று மதம் தொடர்பான மதபோதனைகளை கேட்பதில் ஆர்வம் அதிகரிக்கும். சிலர் மாற்று மதத்திற்கு மாறுவார்கள். ஒரு சிலர் பள்ளி மற்றும் கல்வி நிறுவனங்கள் துவங்குவார்கள்.
சிறிது பச்சரிசி, எள்ளு, தினை சேர்த்து மாவாக்கி, எறும்பு புற்றுகளில் தூவினால் வாயில்லா ஜீவன்கள் உண்டு மகிழும் போது பல தலைமுறை சாபம் நீங்கி புண்ணிய பலன் அதிகரிக்கும்.அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சர்க்கரை பொங்கல் தானம் செய்தால் பண வரவு அதிகரிக்கும்.