

நீதிமான்களான மேஷ ராசியினரே.. இதுவரை ராசிக்கு நான்காமிடத்தில் நின்ற உச்ச குரு பகவான் 31.10.2026 அன்று அதிசாரமாக ஐந்தாமிடமான சிம்ம ராசிக்கு செல்கிறார். பின் வக்ர கதியில் மீண்டும் 25.1.2027 அன்று கடக ராசிக்கு செல்கிறார். இதனால் மேஷ ராசிக்கு ஏற்படப் போகும் பலன்களை பார்க்கலாம்.
பொதுவாக குருபகவான் 5,9,11 ஆகிய இடங்களுக்கு வரும்போது நன்மையே செய்வார். மேஷ ராசிக்கு குரு பகவான் 9,12ம் அதிபதியானவர்.ஐந்தாமிடம் என்பது பூர்வ புண்ணிய ஸ்தானம். குலதெய்வம்,குழந்தைகள் மற்றும் அதிர்ஷ்டம், பதவிகள், கெளரவம் பற்றிக் கூறுமிடம்.ஜனன கால ஜாதகத்தில் வலிமையான தசா புத்தி நடப்பவர்களுக்கு நேர்மை, நாணயத்தை கட்டி காப்பாற்றும் எண்ணம் தோன்றும்.நல்ல ஆலோசனை கூறி தன்னைச் சார்ந்தவர்களை வழி நடத்துவார்கள்.தியாக மனப்பான்மை,தாராள குணம் ஏற்படும்.கெளரவ பதவிகளும் பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். ஆன்மீக நாட்டம் மிகும். மிகக் குறிப்பாக சிவ வழிபாட்டில் ஆர்வம் மிகும். ஆன்ம பலம் பெருகும். உடல் தேஜஸ் பெரும்.தந்தை வழி முன்னோர்களின் ஆசிகள் கிடைக்கும். குழந்தைகளால் மன நிம்மதி ஏற்படும். பூர்வீகத்தை விட்டு வெளியேறியவர்கள் அல்லது வெளிநாட்டில் இருப்பவர்கள் பூர்வீகத்திற்கு வந்து பெற்றோர்கள் , ஆன்மீக பெரியோர்களின் ஆசி பெறுவீர்கள். பூர்வீகச் சொத்தில் இருந்த சட்ட சிக்கல் நீங்கும். விட்டுப் போன குல தெய்வ வழிபாடு, பிரார்த்தனைகளை செய்து முடிப்பீர்கள்.வெளிநாட்டில் பணிபுரிந்த தந்தை மூப்பு காரணமாக ஓய்வு பெற்று பூர்வீகம் வந்து செட்டிலாவர்.சிலருக்கு வேதம்,ஜோதிடம், சாஸ்திரம் கற்கும் ஆர்வம் மிகும். சமுதாய அந்தஸ்த்தை உயர்த்தக்கூடிய சங்கங்களில் நிர்வாக பதவிகள் கிடைக்கும்.
மேஷ ராசியினர் இது விரயச் சனியின் காலம் என்பதை மறக்கக் கூடாது. மேலும் 5.12.2026 அன்று கேது பகவான் சுக ஸ்தானத்திற்குள் நுழைகிறார். அஷ்டம ஸ்தானத்தில் நிற்கும் கிரகங்களால் ஏற்படும் கெடுதலின் பாதியை அர்த்தாஷ்ட கேது பகவான் நடத்துவார் என்பதை உணர்ந்து செயல்பட்டால் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. திருமணத்திற்கு வரன் பார்த்தவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த காலகட்டத்தில் தடைபட்ட பிரச்சனைகளுக்கு காய் நகர்த்தினால் காரிய சித்தி ஏற்படும்.மேலும் முன்யோசனையுடன் முறையான திட்டமிடுதல் உங்களை சரியான பாதையில் அழைத்துச் செல்லும்.
திடீர் அதிஷ்டம், தொழில் மூலம் லாபஸ்தானம் வலுப்பெறும். உயில் சொத்து,பாலிசி முதிர்வுத் தொகை,இன்சூரன்ஸ், உயில் சொத்து, பிள்ளை இல்லாதவர்கள் சொத்து, என எதிர்பாராத பணம் உங்களை மகிழ்விக்கும்.வரா கடன் என்று முடிவு செய்த பணத்தின் சிறு பகுதி உங்களைத் தேடி வரும். பாலிசி முதிர்வு தொகை, மூத்த சசோதர வழி ஆதாயம் ஏற்படும். பொருளாதார நிலையில் நல்ல வளர்ச்சி,செழிப்பு ஏற்படும்.வீட்டில் தங்கம் தங்கவில்லை என்று கவலைப்பட்டவர்களுக்கு தங்கம் சேரும்.கடன் தொல்லைகள் குறையும்.சேமிப்புகள் அதிகரிக்கும். செல்வச் செழிப்புடன் வாழ வேண்டும் என்ற நீண்ட நாள். கனவு நனவாகும். புதிய முதலீடு செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கல் தொடர்பான வழக்குகள் சாதகமாகும். அரசுவழி ஆதாயம் உண்டு.
ராசிக்கு குரு பார்வை கிடைக்கும் இந்த காலகட்டத்தில் தொழில் மற்றும் கருத்து வேறுபாட்டால் பிரிந்து வாழ்ந்தவர்கள் மீண்டும் சேர்ந்து வாழ்வார்கள்.இதுவரை குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி தெளிந்த நீரோடையாக மாறும்.கணவனின் அன்பு, அனுசரனைக் காக ஏங்கிய மேஷ ராசிப் பெண்களுக்கு நல்ல காலம் பிறந்து விட்டது. இதுவரை புரிந்து கொள்ளாத உங்களின் கணவர் உங்களை புரிந்து கொண்டு உங்கள் மனதிற்கேற்ற மணாளனாக மாறுவார். கூட்டுக் குடும்பத்தில் இருக்கும் பெண்கள் மாமியாரால் புகழப்படுவீர்கள்.பண வரவில் இருந்த தடை தாமதம் விலகும். தொழில், உத்தியோக மாற்றத்தால் பொருளாதார முன்னேற்றம் ஏற்படும். கடவுள் நம்பிக்கை மிகுதியாகும். குழந்தைகளை கவனமாக வழி நடத்த வேண்டிய காலம்.குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிறு குறைபாடுகள் தோன்றி மறையும்.சிலரின் பிள்ளைகளின் காதல் பிரச்சனைகள் வீண் வம்பை வீட்டிற்கு கொண்டு வந்து சேர்க்கும்.
ஒருவரின் கல்வியைப் பற்றி கூறும் இடமான நான்காம் இடத்திற்குள் கேது பகவான் நுழைவதால் கண்ணும் கருத்துமாக படிக்க வேண்டும். விரும்பிய உயர் கல்வியில் சேர தடை உண்டாகலாம். அல்லது மதிப்பெண் குறையலாம்.அரசு பொது தேர்வு எழுத இருக்கும் மாணவர்கள் சூழ்நிலையை சாதகமாக பயன்படுத்தி நன்றாக படித்து தேர்வுக்கு தயராகுங்கள்.சரியாக படிப்பு வரவில்லை என்றால் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவது நல்லது.
பத்தாமிடமான தொழில் ஸ்தானத்திற்கு ராகு நுழைவதால் புதிய தொழில் முயற்சிகள் முதலில் சோதனையை கொடுத்து பின் வெற்றியை தரும்.மனம் மிகுந்த புத்துணர்ச்சியுடன் இருக்கும்.உடல் தேஜஸ் பெறும். அழகு மற்றும் ஆரோக்கியம் அதிகரிக்கும்.அனைத்து விஷயங்களையும் ஆக்கப்பூர்வமாக சிந்தித்து செயல்படுவீர்கள். அனைத்து விதமான அதிர்ஷ்டங்களும் உங்களைத் தேடி வரும்.வாழ்க்கையில் ஒரு மனிதன் அனுபவிக்க வேண்டிய அனைத்து பாக்கிய பலன்களும் தேடி வரும். தொழிலுக்கு அரசு அதிகாரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் அகலும். புதிய தொழில் சிந்தனை உருவாகும். இதுவரை ஒரு தொழில் செய்தவர்களுக்கு இன்னொரு தொழில் செய்யும் எண்ணம் வரும்.சில்லறை வியாபாரம் செய்தவர்கள் மொத்த வியாபாரம் செய்ய ஆரம்பிப்பார்கள். தொழிற்சாலைகள், அதிக தொழில் நடத்துபவர்கள் தங்கள் பணியாளர்களின் ஆதரவு கண்டு மன நிம்மதி ஏற்படும்.
உத்தியோகத்தில் இருந்து வந்த தடை தாமதங்கள் சரியாகி விடும். ஏதேனும் காரணத்தால் இதுவரை ஊதியம் வராமல் தடைபட்டு இருந்தால் மொத்தமாக வந்து விடும்.மெமோ வாங்கி வேலைக்கு செல்லாமல் இருந்தவர்களுக்கு வேலையில் சேர உத்தரவு வந்து விடும். குடும்ப சூழல் காரணமாக படித்த படிப்பிற்கு சம்பந்தம் இல்லாத வேலைக்கு சென்றவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். வேலை பார்க்கும் இடத்தில் உங்களின் பணிச்சுமையை அதிகரித்த உயர் அதிகாரிகள் நட்பு பாராட்டுவார்கள். வெளிநாட்டு வேலைக்கு செல்பவர்கள் பணியின் தன்மை, ஊதியம், பணி நியமன ஆணை, பணிக்கான ஒப்பந்தம் போன்றவற்றை சரி பார்த்து விட்டு வேலைக்கு செல்ல வேண்டும். உத்தியோகத்தில் இருப்பவர்களும் பதவி உயர்வு, ஊதிய உயர்வுடன் விரும்பிய ஊருக்கு மாற்றம் கிடைக்கும். ஒரு சிலருக்கு அடிப்படை வசதி கூட இல்லாத சிறிய ஊருக்கு இடமாற்றம் கிடைக்கும்.தொழில் வேலை தொடர்பான மன சஞ்சலம் குறையும்.
அரசியலில் இருப்பவர்கள் கட்சி மாறும் எண்ணத்தை விட்டு முழு நேர அரசியல்வாதியாக தன்னை ஈடுபடுத்தி அதிக செலவு செய்து சமூக தொண்டாற்றி மக்கள் மனதில் இடம் பிடிக்க உழைக்க வேண்டும். கட்சிக்காக, தொண்டர்களுக்காக, மக்க ளுக்காக உழைக்க வேண்டும். தான் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்ற கர்வத்துடன் செயல்படக் கூடாது.பொது நிகழ்ச்சியில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். கெளரவ பதவிகளும் பட்டங்களும், பதக்கங்களும் வந்து குவியும். ஆனால் பெற்ற பதவிக்கான வேலையை திறம்பட செய்து பெயரும் புகழும் அடைவதில் மிகுதியான சிரமம் இருக்கும்கெளரவப் பதவியில் இருப்பவர்கள் பதவியை தக்க வைக்க மிகுதியான போராட்டங்களை சந்திக்க நேரும். கோவில் நிர்வாகம் மற்றும் பொருளாதாரம் தொடர்பான பதவியில் இருப்பவர்கள் மிகுத்த கவனத்துடன் இருக்க வேண்டும். இறை வழிபாட்டில் ஈடுபட்டால் கஷ்ட காலம் கண் இமைக்கும் முன் கடந்து விடும்.
பராமரிப்பு இல்லாதசிவன் கோவில்களுக்கு பராமரிப்பு பணிக்கு உதவுவதுடன் தீபம் ஏற்ற எண்ணெய் வாங்கித் தர வேண்டும். வெள்ளிக்கிழமை விரதம் இருந்து மகாலட்சுமியை வழிபட வேண்டும்.