கும்பம்- 2026 வார ராசிபலன் 16.8.2026 முதல் 22.8.2026 வரை

வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும்.
Kumbam
Published on

கும்பம்

திட்டமிட்டு செயல்பட வேண்டிய வாரம். ராசிக்கு ஏழாமிடத்தில் சூரியன் கேதுடன் சேர்கை பெறுகிறார்கள். மனதில் இனம் புரியாத கவலை அதிகரிக்கும். எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. எதிர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.பேச்சில் பய உணர்வு, இயலாமை வெளிப்படும். உறவினர்களுடன் வீண் விவாதத்தைத் தவிர்க்க வேண்டும். குடும்பத்தில் உள்ளவர்களை அனு சரித்துச் செல்வது நல்லது. பேச்சில் நிதானம் தேவை. புதிய சொத்துக்கள் சேரும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் கூடும். எதிர்பார்த்த விலைக்கே பழைய சொத்தை விற்பீர்கள். சிலரின் ஆரோக்கிய குறைபாடுகள் அறுவை சிகிச்சையில் சீராகும். திருமணம் முயற்சியில் சிந்தித்து செயல்பட வேண்டும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். காதல் சாதகமாகும். 17.8.2026 அன்று மாலை 4.19 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும்.பெரிய முதலீடு போன்ற புதிய முயற்சிகளை தவிர்த்து அன்றாட பணியில் மட்டும் ஈடுபடவும். ஆடி வெள்ளிக்கிழமை விரதம் இருந்து பன்னீர் அபிஷேகம் செய்து அம்மன் வழிபாடு செய்யவும்.

‘பிரசன்ன ஜோதிடர்’

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com