

நினைப்பது நடக்கும் வாரம். கோட்ச்சார குரு பகவான் அதிசாரமாக சம சப்தமஸ்தானம் சென்று ராசியை பார்க்கிறார். வெகு விரைவில் ராசியை விட்டு ராகு பகவான் விலகப் போகிறார்.வாடிக்கையாளர்கள் தொழிலுக்கு ஒத்துழைத்து பணம் கொடுங்கல் வாங்கல் சுமூகமாக நடைபெறும். அடமானச் சொத்துக்கள் நகைகளை மீட்கக் கூடிய நல்ல சந்தர்ப்பங்கள் தேடிவரும். நிலுவையில் உள்ள சம்பள பாக்கிகள் வந்து சேரும்.கடன் தொல்லை குறைந்து சேமிப்பு உயரும். எதிரிகள் விலகுவார்கள். புதுபுது திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த உகந்த நேரம். அதில் பரிபூரண வெற்றி கிடைக்கும். இப்பொழுது நீங்கள் போடும் விதை ராகு கேது பெயர்ச்சிக்குப் பிறகு விருட்சமாக வளரும். மைத்துனரால் ஏற்பட்ட கவுரவக் குறைச்சல் சீராகும். முன்னோர்களின் நல்லாசியால் சுற்றமும், நட்பும் நிறைந்த சூழலில் கோலாகலமாக திருமணம் நடைபெறும். ஆண் வாரிசு உண்டாகும். அரசின் கான்ட்ராக்ட் மற்றும் குத்தகைதாரர்களுக்கு நல்ல ஒப்பந்தம் கிடைக்கும். சிலருக்கு தந்தையின் வாரிசு வேலை கிடைக்கும். ஆரோக்கியத்தில் ஏற்பட்ட குறைபாடு சீராகும். பௌர்ணமி அன்று ஸ்ரீ கிருஷ்ணரை வழிபட இன்பங்கள் கூடும்.