

எதிலும் நிதானமும் எச்சரிக்தையும் தேவை. ராசியில் உள்ள ராகுவிற்கு செவ்வாயின் 8ம் பார்வை உள்ளது. கண் திருஷ்டி, போட்டி, பொறாமை போன்றவற்றால் வைத்தியச் செலவு உருவாகும். கடன் பிரச்சினைகளால், குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலையால் மனச்சோர்வு உண்டாகும். தம்பதிகள் தங்கள் பிரச்சினைகளை மூன்றாம் நபரிடம் கொண்டு செல்லாமல் தாங்களே தீர்த்துக் கொண்டால் ஊடல் கூடலாகும். சிறு சிறு உடல் உபாதைகள் தோன்றி மறையும். உத்தியோகஸ்தர்கள் மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க நேரிடும். வெளியூர், வெளிநாட்டு வேலை அல்லது குடியுரிமை பெற்று செட்டிலாவது போன்ற பலன்கள் கிடைக்கும். குல தெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்கும். திருமண முயற்சிகள் நல்ல முன்னேற்றம் தரும். சிலர் சகோதர, சகோதரிகளுக்காக பணம் செலவு செய்ய நேரும். உடல் அசதி, அசவுகரியம் மற்றும் பொருள் விரயத்திலிருந்து விடுபட பௌர்ணமி அன்று துர்க்கை காளியை வழிபடவும்.