

மன அமைதி கிடைக்கும் வாரம். ராசிக்கு 9ம்மிடமான பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் புதன் சுக்கிரன் சேர்க்கை உள்ளது. நண்பர்கள் மூலம் புதிய தொழில் தொடர்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். வேலை, வியாபாரம், தொழில் அபிவிருத்தி போன்றவற்றிற்கு அலைச்சலான பயணமும் செலவுகளும் செய்ய நேரும். விளையாட்டு, காவல் துறையினரின் திறமை பாராட்டப்படும். பிறருக்கு உதவி செய்வதில் ஆர்வம் அதிகரிக்கும். தந்தை பூர்வீகச் சொத்து, பாகப்பிரிவினை சம்பந்தப்பட்ட விசயத்திற்காக கோபத்துடன் மன இறுக்கத்துடன் இருப்பார். தந்தையின் ஆரோக்கியத்திற்காக விட்டுக் கொடுக்க முயற்சிப்பீர்கள். குடும்பப் பிரச்சினைகளை தம்பதிகள் தங்களுக்குள் பேசி சீராக்குவார்கள். வாழ்க்கைத் துணை அனைத்து பணிகளுக்கும் உதவியாக இருப்பார். சிலர் வீட்டை மாற்றலாம். அல்லது வேலையில் மாற்றம் உண்டாகும். பார்த்துச் சென்ற வரனிடம் இருந்து சாதகமான பதில் வரும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள். சித்தர்களை ஜீவ சமாதியில் வழிபடவும்.