கும்பம்- 2026 வார ராசிபலன் 1.11.2026 முதல் 7.11.2026 வரை

தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும்.
Kumbam
Published on: 

கும்பம்

அனுகூலமான வாரம். ராசியில் உள்ள ராகு பகவான் வெகு விரைவில் ராசியை விட்டு வெளியேறப் போகிறார். ராசிக்கு அதிசார குருவின் பார்வை உள்ளது. ஏழரைச் சனியின் ஆதிக்கம் குறையும். கோட்சார கிரகநிலை மெதுமெதுவாக மாறிக்கொண்டு வருவதால் வெகு விரைவில் நிலைமை சீராகும். அரசு சம்பந்தப்பட்ட முயற்சிகளில் காரிய சித்தி உண்டாகும். போட்டி பந்தயங்களில் வெற்றி உண்டு. வங்கிக் கடன் கிடைப்பதில் இருந்த தடை, தாமதம் அகலும். தாய், தந்தை, சகோதரியிடம் இருந்த கருத்து வேற்றுமை அகலும். உயர் கல்வியில் இருந்த தடை தாமதம் விலகும். பிள்ளைகளின் திருமண முயற்சி வெற்றியைத் தரும். விருந்தினர் வருகை வீட்டை கலகலப்பாக்கும். தொழிலாளிகளின் குறைகளைக் கேட்டறிந்து அதனை தீர்க்க முயல்வது நிறுவனத்தை வளரச் செய்யும். 5.11.2026 காலை 9.34 முதல் 7.11.2026 அன்று மாலை 5.15 வரை சந்திராஷ்டமம் இருப்பதால் நண்பர்களுக்காக கடன் பொறுப்பு ஏற்பதை தவிர்க்கவும். உணவால் ஒவ்வாமை ஏற்படும் என்பதால் எளிமையான உணவை சாப்பிடுவது நலம். தூய்மை பணியாளர்களின் தேவை அறிந்து தீபாவளி தானம் வழங்கவும்.

`பிரசன்ன ஜோதிடர்'

ஐ.ஆனந்தி

செல்: 98652 20406

X