

அயராத உழைப்பும் முயற்சியும் பலன் தரும் சாதகமான வாரம். ராசியை விட்டு ராகு வெகு விரைவில் வெளியேறப் போகிறார். எதிர்காலம் பற்றிய பயம் விலகி மனதில் தைரியம் குடிபுகும். தொழிலில் இருந்து வந்த தடை தாமதங்கள் அகலும். தந்தையின் அரசு வாரிசு வேலை கிடைக்கும். குடும்ப உறவுகளிடம் நிலவி வந்த சங்கடங்கள் மறையும். குலத்தொழில் செய்பவர்களின் புகழ், அந்தஸ்து, கவுரவம், பணபலம் உயரும். புதிய எதிரிகள், நோய் தாக்கம் உருவாகும். வாழ்க்கை துணையின் வேலை நிரந்தரமாகும். கமிஷன் அடிப்படையில் தொழில் புரிபவர்களுக்கு அதிகப்படியான நன்மைகள் உண்டு. எதிர்காலத் தேவைக்கான இன்சூரன்ஸ் பாலிசி அல்லது நலத்திட்டங்களில் சேமிப்பு போன்ற சுப செலவுகள் அதிகரிக்கும். பிள்ளைகள் கல்விக்காக இடம் பெயரலாம். திருமணக் கனவு நனவாகும். குழந்தை பாக்கியம் கிட்டும். உத்தியோகத்தில் விரும்பிய இடமாற்றம் ஊதிய உயர்வு உண்டு. மாமியார் மருமகள் கருத்து ஒற்றுமை மேம்படும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகமாகும். பௌர்ணமி அன்று பால் அபிசேகம் செய்து சிவ வழிபாடு செய்யவும்.