கும்பம்- 2026 ஐப்பசி மாத ராசிபலன்

இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும்.
Kumbam rasipalan
Published on: 

கும்ப ராசி நேயர்களே!

பராபவ வருடம் ஐப்பசி மாதக் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது, மாதத் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் சனி வக்ர இயக்கத்தில் தள ஸ்தானத்தில் இருக்கிறார். குரு பகலான் மாதத் தொடக்கத்திலேயே சிம்ம ராசியில் சஞ்சரித்து உங்கள் ராசியைப் பார்க்கப்போகிறார். மாதக் கடைசியில் ராகு-ரேலுக்களின் பெயர்ச்சியும் நிகழலிருக்கிறது. இந்த கிரககளின் பெயர்ச்சியால் நன்மை, தீமை இரண்டும் கலந்தே நடந்தாலும், குரு பார்வை பதியப்போவதால் முடிவில் நல்லது நடக்கும். எனவே அந்த குரு பகவாளை சிறப்பாகக் கொண்டாடி வழிபட வேண்டிய மாதம் இது மேலும் சர்ப்பக்கிரகம் விலகுவதால் அந்த நேரத்தில் சர்ப்ப தெய்வ வழிபாடுகளை முறையாக மேற்கொண்டால் முன்னேற்றம் கூடும்.

சிம்ம - குருவின் ஆதிக்கம்

மாதத் தொடக்கத்தில் கடகத்தில் உச்சம் பெற்று சஞ்சரிக்கும் குரு பகவான், ஐப்பசி 3-6 நேதி (20.10.2005) அன்று சிம்ம ராசிக்குச் செல்கிறார். அங்கு சில மாதங்கள் சஞ்சரித்த பிறகு மீண்டும் கடக ராசிக்கு வக்ர கதியில் வருகிறார். சிம்மத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியைப் பார்ப்பதோடு 3, 11 ஆகிய இடங்களிலும் பதிகிறது. குரு பார்வை பதிந்த இடங்கள் எல்லாம் நன்மை தரும் என்பதால், உங்கள் உடல்நலமும், மனநலமும் சீராகும். மதிப்பும், மரியாதையும் உயரும். இல்லம் தேடி நல்ல தகவல் வந்துசேரும். பொருளாதாரப் பற்றாக்குறை அலைம், புதிய முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர்கள்.

குருவின் பார்வை 3, 11 ஆகிய இடங்களில் பதிவதால் அண்ணன் தம்பிகளுக்குள் இருந்த அரசல் புரசல்கள் மாறும். ஒற்றுமை பலப்படும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். குடும் பச்சுமை கூடுதலாக இருந்தாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. எதிலும் ஈடுபடும் முன் கொஞ்சம் யோசித்துச் செயல்படுவது நல்லது உத்தியோகத்தில் உங்கள் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும். கொடுக்கல் வாங்கல்களில் இருந்த தடுமாற்றம் அகலும். தொழில் சூடுபிடிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் 'விருப்ப ஓய்வில் வெளிவந்து சுயதொழில் தொடங்கலாமா என்று சிந்திப்பர், வெளிநாட்டில் உள்ள நல்ல நிறுவனங்களில் இருந்தும் ஆதரவு கிடைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி

உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கும் ராகு பகவான், 13.11.2026 அன்று உங்கள் ராசிக்கு 12-ம் இடம் எனப்படும் விரய ஸ்தானத்திற்கு வருகிறார். அங்கு ஒன்றரை ஆண்டு காலம் அவர் தங்கி இருக்கும் பொழுது வீண் விரயம் அதிகரிக்கும் என்பது பொதுவான நியதி. மேலும் ஏழரைச் சனியில் குடும்பச் சனியின் ஆதிக்கமும் நடைபெறுகின்றது. எனவே சுபவிரயங்களை மேற்கொள்வது நல்லது. அடிக்கடி பயனணங்கள் ஏற்படும். உத்தியோக மாற்றம், ஊர் மாற்றம் ஏற்படலாம். கடன்கமை அதிகரித்தாலும் உடனுக்குடன் அதை நிவர்த்தி செய்வீர்கள். இருப்பினும் தொழில் முன்னேற்றம் கருதி வங்கிகளில் வாங்கும் சூழ்நிலை உருவாகும்.

ஆறாம் இடத்தில் கேது சஞ்சரிப்பதால் உத்தியோகம், தொழிவில் திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்காது. உடல்நலனில் பிரச்சினை அதிகரிக்கும். மூடிக்கிடந்த தொழில் நிலையத்தை திறப் புவிழா நடத்திப் பார்க்க எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படும். குடும்பத்தில் கருத்து வேறுபாடு தோன்றும். எதிலும் அவசரமாக முடிவெடுக்க வேண்டாம். அலுவலகப் பணிகளில் ஆர்வம் இருந்தாலும் அதிகாரிகளின் கெடுபிடியால் மளவருத்தம் ஏற்படும்.

வியாபாரம்

பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு பொருளாதார வளர்ச்சி ஏற்படும். வியாபாரம் மற்றும் தொழில் செய்பவர்களுக்கு நல்ல தகவல் கிடைக்கும் உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உயர்பதவி உண்டு. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். மாணவ-மாணவிகளுக்கு படிப்பில் தேர்ச்சி உண்டு. பெண்களுக்கு குடும்பச்சுமை கூடினாலும் அதைச் சமாளிக்கும் ஆற்றல் பிறக்கும். சுபகாரியப் பேச்சு முடிவாகும்.

X

Maalai Malar
www.maalaimalar.com