Vox Pop

TN Election 2026: தாராபுரம் யாருக்கு?.. மக்கள் சொல்வது இதுதான்

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

மாலை மலர்

தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன.

தற்போதைய சூழலில் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி தாராபுரம் பகுதி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய vox pops நடத்தினோம்.

தி.மு.க.விற்கு வாக்களிப்பதாக 18 பேரும், அ.தி.மு.க.விற்கு வாக்களிப்பதாக 4 பேரும், தவெகவுக்கு 2 பேரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் மற்றும் மற்ற கட்சிகளுக்கு வாக்களிப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை.