Vox Pop

TN Election 2026: சட்டசபை தேர்தலில் முன்னிலை யாருக்கு? ஸ்டெர்லிங் ரோட்டில் மக்கள் சொன்னது என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தை கிட்டத்தட்ட முடித்துவிட்டு, தொகுதி மற்றும் வேட்பாளர் பட்டியலை அறிவிக்கும் பணிகளில் மும்முரம் காட்டி வருகின்றன. இன்னும் ஓரிரு நாட்களில் அனைத்து கட்சிகளின் வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை ஸ்டெர்லிங் ரோட்டில் vox pop நடத்தினோம்.

40 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக த.வெ.க.விற்கு வாக்களிப்பதாக 20 பேர் தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக தி.மு.க.விற்கு வாக்களிப்பதாக 15 பேரும், தெரிவித்தனர். அ.தி.மு.க. கட்சிக்கு வாக்களிப்பதாக 4 பேரும், மற்ற வேட்பாளற்களுக்கு வாக்களிப்பதாக ஒருவரும் தெரிவித்தார். இந்த பகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக யாரும் தெரிவிக்கவில்லை.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.