Vox Pop

TN Election 2026: தமிழகத்தில் யாருக்கு முன்னிலை? அசோக் பில்லர் மக்கள் சொன்னது என்ன?

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகின்றன. சில கட்சிகள் இன்னும் அடுத்தக்கட்டமாக தேர்தல் பரப்புரையையும் தொடங்கிவிட்டன.

2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி, அ.தி.மு.க. கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக் கழகம் கட்சி என தற்போதைய சூழலில் நான்கு முனை போட்டி நிலவுகிறது.

தேர்தல் தொடங்க இன்னும் ஒரு மாதம் கூட இல்லாத நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை அசோக் பில்லர் பகுதியில் vox pop நடத்தினோம்.

45 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக த.வெ.க.விற்கு வாக்களிப்போம் என்று 24 பேர் தெரிவித்தனர்.

இதற்கு அடுத்தபடியாக தி.மு.க.விற்கு வாக்களிப்போம் என்று 9 பேரும், அ.தி.மு.க. கட்சிக்கு வாக்களிப்பதாக 8 பேரும் தெரிவித்தனர். இதேபோல் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக 2 பேரும், மற்ற வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதாக 2 பேர் தெரிவித்தனர்.

இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.