Vox Pop

TN Election 2026: விழுப்புரத்தில் யாருக்கு வாக்கு?.. மக்கள் பதில்

சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய விழுப்புரத்தில் vox pop நடத்தினோம்.

மாலை மலர்

தமிழ்நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.

தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய விழுப்புரத்தில் vox pop நடத்தினோம். நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக திமுகவிற்கு 27 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.

அதற்கு அடுத்தபடியாக தவெகவுக்கு 11 பேரும் அதிமுகவிற்கு 9 பேரும், நாம் தமிழருக்கு ஒருவரும் வாக்களிப்பதாக தெரிவித்தனர்.