வன்னியரசு, ஆளூர் ஷா நவாஸ் 
ஐ.பி.எல்.

விடுதலை சிறுத்தைகள் வேட்பாளர்கள் அறிவிப்பு- வானூரில் வன்னியரசு போட்டி

நாகை தொகுதியில் விடுதலை சிறுத்தைகள் சார்பில் ஆளூர் ஷா நவாஸ் போட்டியிடுகிறார்.

மாலை மலர்

சென்னை:

தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி நடைபெற்றது. 

இந்நிலையில், விடுதலை சிறுத்தைகள் போட்டியிடும் 6 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். வேட்பாளர்கள் விவரம் வருமாறு:-

காட்டுமன்னார்கோவில் - சிந்தனை செல்வன்

வானூர் -வன்னியரசு

அரக்கோணம் (தனி) - கவுதம் சன்னா

செய்யூர் - பனையூர் பாபு

திருப்போரூர் - எஸ்.எஸ்.பாலாஜி

நாகை -ஆளூர் ஷா நவாஸ்.