ஐ.பி.எல்.

ஐ.பி.எல். தொடரை கவுரவிக்க டூடுல் வெளியிட்டது கூகுள்

19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது.

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கடந்த 2007-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 18 சீசன்கள் நடந்து முடிந்துள்ளன.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகள் தலா 5 முறை கோப்பையை வென்றுள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 3 முறை கோப்பையை வென்றுள்ளது.

இந்நிலையில், 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. இதை சிறப்பிக்கும் வகையில் கூகுள் நிறுவனம் சிறப்பு டூடுல்

வெளியிட்டது. அது ஐபிஎல் கிரிக்கெட்டை குறிப்பிடும் வகையில் அமைந்திருக்கிறது.