தனுசு
நன்மைகள் நடக்கும் வாரம். பாக்கிய ஸ்தான அதிபதி சூரியன் கேந்திரத்தில் அமர்வது தனுசு ராசிக்கு நன்மைகளை அதிகரிக்க கூடிய அமைப்பாகும். புதிய சொத்துக்கள் சேரும். வாகன வசதிகள் பெருகும். சொத்துக்களாலும் சொந்தங்களாலும் ஏற்பட்ட மன உளைச்சல் அகலும். பாக்கிய ஸ்தானம் பலம் பெறுகிறது. தெய்வ சிந்தனை அதிகரிக்கும். முன்னோர்களின் நல்லாசி கிட்டும். பூர்வீகச் சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். ஆழ்ந்த தொழில் ஞானமும், தெளிவான உள்ளுணர்வும் உண்டாகும்.
உறவுகளின் ஆதரவை சார்ந்தே வாழ்ந்தவர்களுக்கு முன்னேற்றப் பாதை தென்படும். கர்மம் செய்ய புத்திரன் பிறப்பான். இல்வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பங்கு மார்க்கெட் லாபம் கூடும். காதல் கைகூடும். சிலர் வீடு, வாகனம், திருமணம் போன்ற சுப செலவிற்காக கடன் பெறலாம். நீண்ட காலமாக தடைபட்ட உயர் ஆராய்ச்சி கல்வி வாய்ப்பு சாதகமாகும். 27.3.2026 அன்று காலை 9.36க்கு சந்திராஷ்டமம் ஆரம்பிப்பதால் வீண் விரயங்கள் இழப்புகள் மருத்துவ செலவுகள் வரலாம். ஆன்மீக குருமார்களின் நல்லாசிகளை பெறவும்.
மகரம்
மன உளைச்சல் மன அழுத்தங்கள் நீங்கும் வாரம். ராசி அதிபதி சனி பகவான் வெற்றி ஸ்தானத்தில் சூரியனுடன் சேர்ந்துள்ளார். அவப்பெயர்கள், சங்கடங்கள் விலகும். கடன் பிரச்சினையால் நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலைமாறும். சிந்திக்கும் திறனால், உள்ளுணர்வால் தொழிலில், வாழ்வில் ஏற்படப்போகும் அனைத்து ஏற்ற இறக்கங்களையும் உணர்ந்து செயல்படுவீர்கள். லாபகரமான நிலைக்கு தொழிலை கொண்டு செல்வீர்கள். இழந்த சொத்துக்கள் மீண்டும் கைக்கு வந்து சேரும். புதிய சொத்துக்கள் வாங்கி மகிழ்வீர்கள்.
வியாபாரிகளுக்கு எதிர்பாராத லாபங்கள் உண்டு. வேலை இல்லாதவர்களுக்கு நிலையான, நிரந்தரமான வேலை கிடைக்கும். பெண்களுக்கு அழகிய ஆடை ஆபரணங்கள் சேர்க்கை அதிகரிக்கும். ஆண்களுக்கு மனைவியால் மட்டற்ற மகிழ்ச்சி நிலவும். கடன் தீர்க்க சொத்துக்களை விற்றவர்கள் புதிய சொத்துக்கள் வாங்குவார்கள். மாணவர்களுக்கு கல்வி ஆர்வம் அதிகரிக்கும். குழந்தை பேறு ஏற்படுவதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளது. திருமண தடைகள் அகலும். வெள்ளிக்கிழமை மகாலட்சுமியை வழிபடவும்.
கும்பம்
சுணங்கிக் கிடந்த காரியங்களில் இருந்து வந்த தடை தாமதம் நீங்கி எதிலும் வெற்றி உண்டாகும். இழந்த நிம்மதி, சந்தோஷம் உங்களுக்குள் மீண்டும் குடிபுகும். குலத்தொழில், கூட்டுத் தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு முயற்சிகள் எடுத்தபின் நல்ல வேலை கிடைக்கும். சிலருக்கு அரசு பணியில் அமர்கின்ற வாய்ப்பு உண்டாகும். பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். இட மாற்றம் ஏற்படும். வழக்குகள் சாதகமாகும்.
பெண்கள் வேலைக்கு செல்லும் இடத்தில் மதிப்புடன் நடத்தப்படுவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். புதிய அரசாங்க ஒப்பந்தங்கள் கிடைக்கும். சகோதர உறவுகளால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்கு கடன் அல்லது பொருள் இழப்பு அல்லது சிறு நோய் தாக்கம் உண்டாகலாம். எந்த விஷயத்தையும் கணவன், மனைவிக்கிடையே திட்டமிட்டு செய்வது நன்மையை மேலும் அதிகரிக்கும். திருமணத்திற்கு நல்ல வரன் அமையும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சிினை நீங்கும். பஞ்சமுக நெய் தீபம் ஏற்றி ஆஞ்சநேயரை வழிபடவும்.
மீனம்
சுமாரான வாரம். ராசியில் சூரியன் சனி சேர்க்கை உள்ளது. ஜென்மச் சனியின் ஆதிக்கம் உள்ளதால் முதலீட்டாளர்கள் இயன்றவரை பெரிய முதலீடுகளை தவிர்க்க வேண்டும். குடும்ப உறவுகளுடன் அனுசரித்து செல்வது நல்லது. விண்ணப்பித்த தொழில், வீட்டு, வாகன கடன் இந்த வாரத்திற்குள் கிடைத்து விடும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் சற்று இழுபறிக்குப் பின்னே நடைபெறும். சீருடைப் பணியாளர்களுக்கு விரும்பிய இடமாறுதல் கிடைக்கும்.
பெண்களுக்கு மாமனார், மாமியாரால் ஏற்பட்ட மன உளைச்சல் நீங்கும். கணவன் மனைவி கருத்து வேற்றுமை நீங்கும். உடல், மனரீதியான சங்கடங்கள் அகலும். வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தவர்கள் மீண்டும் தாயகம் திரும்புவார்கள். சிலர் வெளியூர், வெளி மாநிலப் புண்ணியத் ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். குடும்பத்தில் விசேஷ நிகழ்ச்சிகள் நடக்கும். பிள்ளைகள் நலனில் ஆர்வம் அதிகரிக்கும். கடன் பெற்று சொத்துக்கள் சேர்ப்பீர்கள். உயர்ரக வாகன வசதி அமையும். சனிக்கிழமை நவகிரகங்களை வழிபடவும்.
'பிரசன்ன ஜோதிடர்'
ஐ.ஆனந்தி
செல்: 98652 20406