வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 28 ஜனவரி 2025

இன்று போதாயன அமாவாசை. திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம்.

இன்றைய பஞ்சாங்கம்

குரோதி ஆண்டு தை-15 (செவ்வாய்க்கிழமை)

பிறை: தேய்பிறை

திதி: சதுர்த்தசி இரவு 8.09 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம்: பூராடம் காலை 9.20 மணி வரை பிறகு உத்திராடம்

யோகம்: சித்தயோகம்

ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம்: வடக்கு

நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று போதாயன அமாவாசை. சுவாமிமலை முருகப்பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். மதுரை ஸ்ரீ செல்லத்தம்மன் ரதோற்சவம். திருமொச்சியூர் சூரிய நயினார்கோவில் ஸ்ரீ சிவபெருமான் பவனி. திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திரு நறையூர் ஸ்ரீ சித்தநாதீஸ்வரர் கோவில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத் தொன்று விநாயகர் காலை சிறப்பு அபிஷேகம், அலங்காரம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நன்மை

ரிஷபம்-உதவி

மிதுனம்-உவகை

கடகம்-ஜெயம்

சிம்மம்-குழப்பம்

கன்னி-பரிசு

துலாம்- பரிசு

விருச்சிகம்-புகழ்

தனுசு- அமைதி

மகரம்-ஓய்வு

கும்பம்-கவனம்

மீனம்-உழைப்பு