வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 31 அக்டோபர் 2025: திருத்தணி முருகப்பெருமான் கிளி வாகன சேவை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-14 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.31 மணி வரை பிறகு ஏகாதசி.

நட்சத்திரம் : அவிட்டம் பிற்பகல் 3.03 மணி வரை. பிறகு சதயம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

இன்று சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுருந்தளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் தைலக்காப்பு உற்சவ விழா. பூதத்தாழ்வார் திருநட்சத்திர வைபவம். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.

பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம். கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை. மாலையில் ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பாள் கோவில்களில் அபிஷேகம். கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-யோகம்

ரிஷபம்-அமைதி

மிதுனம்-நட்பு

கடகம்-ஆதரவு

சிம்மம்-ஆக்கம்

கன்னி-நிம்மதி

துலாம்- லாபம்

விருச்சிகம்-இன்பம்

தனுசு- நற்செயல்

மகரம்-உற்சாகம்

கும்பம்-திறமை

மீனம்-சாந்தம்