வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 22 நவம்பர் 2025: ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்கார திருமஞ்சன சேவை.திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை-6 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : துவிதியை மாலை 4.24 மணி வரை பிறகு திருதியை

நட்சத்திரம் : கேட்டை மாலை 4.49 மணி வரை பிறகு மூலம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை

குச்சனூர் ஸ்ரீ சனிபகவானுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கும் தேவகோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகருக்கும் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீவரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

ஸ்ரீவைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் புறப்பாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் கத்தவால் சமஸ்தான மண்டபம் எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-நலம்

ரிஷபம்-ஊக்கம்

மிதுனம்-மகிழ்ச்சி

கடகம்-சிந்தனை

சிம்மம்-ஆதாயம்

கன்னி-சுபம்

துலாம்- ஆர்வம்

விருச்சிகம்-போட்டி

தனுசு- உண்மை

மகரம்-உயர்வு

கும்பம்-சுகம்

மீனம்-அன்பு