வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 20 செப்டம்பர் 2025: பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை

சஸ்திரஹத பிதுர் மகாளயம்.உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-4 (சனிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : சதுர்த்தசி நள்ளிரவு 1.02 மணி வரை பிறகு அமாவாசை

நட்சத்திரம் : மகம் காலை 9.57 மணி வரை பிறகு பூரம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருவல்லிக்கேணி, கீழ்த்திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை பவனி

இன்று மாத சிவராத்திரி. சஸ்திரஹத பிதுர் மகாளயம். குச்சனூர் ஸ்ரீ சனிபகவான் அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீவில்லிபுத்தூர் சமீபம் திருவண்ணாமலை ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் கருட வாகனத்தில் புறப்பாடு. அருணந்தி சிவாச்சாரியார் குரு பூஜை. மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்க ளில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை.

உப்பிலியப்பன் கோவில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீ பரிமள ரெங்கராஜர் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-கவனம்

ரிஷபம்-உண்மை

மிதுனம்-யோகம்

கடகம்-விருத்தி

சிம்மம்-கட்டுப்பாடு

கன்னி-நற்செயல்

துலாம்- பயணம்

விருச்சிகம்-கடமை

தனுசு- பாராட்டு

மகரம்-பொறுமை

கும்பம்-வெற்றி

மீனம்-நிறைவு