வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 18 செப்டம்பர் 2025: சன்யஸ்த மகாளயம்

திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு புரட்டாசி-2 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : துவாதசி நள்ளிரவு 1.18 மணி வரை பிறகு திரயோதசி

நட்சத்திரம் : பூசம் காலை 9.28 மணி வரை பிறகு ஆயில்யம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி

இன்று சன்யஸ்த மகாளயம், சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருத்தணி ஸ்ரீ முருகப் பெருமானுக்குப் பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவானுக்கு கொண்டைக் கடலைச் சாற்று வைபவம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு அபிஷேகம். திருக்கோஷ்டியூர் ஸ்ரீசவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமருக்கு திருமஞ்சனம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர், திருவிடைமருதூர் கோவில்களில் மாலை சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் பவனி.

இன்றைய ராசிபலன்

மேஷம்-சுகம்

ரிஷபம்-சாதனை

மிதுனம்-முயற்சி

கடகம்-செலவு

சிம்மம்-வரவு

கன்னி-பெருமை

துலாம்- ஆதரவு

விருச்சிகம்-யோகம்

தனுசு- பரிசு

மகரம்-நன்மை

கும்பம்-மகிழ்ச்சி

மீனம்-உவகை