வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 15 டிசம்பர் 2025: சர்வ ஏகாதசி, சுபமூகூர்த்த தினம்

சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு கார்த்திகை - 29 (திங்கள்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : ஏகாதசி இரவு 11.43 மணி வரை பிறகு துவாதசி

நட்சத்திரம் : சித்திரை பிற்பகல் 2.09 மணி வரை பிறகு சுவாதி

யோகம் : சித்த/அமிர்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை

சர்வ ஏகாதசி. சுபமூகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். திருவெண்காடு, திருக்கழுக்குன்றம், திருவாடானை, திருக்கடவூர் தலங்களில் 1,008 சங்காபிஷேகம். திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை.

திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாள் காலை அலங்கார திருமஞ்சன சேவை. திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதர் காலை பால் அபிஷேகம். திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட் நகர், திருவிடைமருதூர் தலங்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம் வழிபாடு. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு அலங்கார திருமஞ்சன சேவை. ஸ்ரீரங்கம் ஸ்ரீநம்பெருமாள் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-முயற்சி

ரிஷபம்-இன்பம்

மிதுனம்-புகழ்

கடகம்-செலவு

சிம்மம்-வெற்றி

கன்னி-உறுதி

துலாம்- ஈகை

விருச்சிகம்-தனம்

தனுசு- வரவு

மகரம்-சாந்தம்

கும்பம்-மாற்றம்

மீனம்-அன்பு