வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 14 நவம்பர் 2025: திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஐப்பசி-28 (வெள்ளிக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : தசமி மறுநாள் விடியற்காலை 4.55 மணி வரை. பிறகு ஏகாதசி.

நட்சத்திரம் : பூரம் நள்ளிரவு 1.51 மணி வரை பிறகு உத்திரம்.

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப்பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் பவனி. திருத்தணி ஸ்ரீமுருகப்பெருமானுக்கு கிளி வாகன சேவை. திருஇந்தளூர் ஸ்ரீபரிமளரெங்கராஜர் திருக்கல்யாணம், இரவு சூர்ணாபிஷேகம், வெள்ளி ரதம் திருவீதி புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை, மாடவீதி புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித் தாயார் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்ற ஸ்ரீபெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கடரமண சுவாமிக்கு திருமஞ்சனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள் வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர், படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மனுக்கு அபிஷேகம். ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீமுருகப் பெருமானுக்கு பால் அபிஷேகம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-விவேகம்

ரிஷபம்-மாற்றம்

மிதுனம்-விருத்தி

கடகம்-லாபம்

சிம்மம்-ஆதரவு

கன்னி-ஆசை

துலாம்- உதவி

விருச்சிகம்-உறுதி

தனுசு- நம்பிக்கை

மகரம்-உைழப்பு

கும்பம்-நற்செய்தி

மீனம்-உதவி