வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 29 ஆகஸ்ட் 2025: ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார் புறப்பாடு

சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-13 (வெள்ளிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சஷ்டி இரவு 7.39 மணி வரை பிறகு சப்தமி.

நட்சத்திரம் : சுவாதி காலை 11.59 மணி வரை பிறகு விசாகம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

எமகண்டம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

சூலம் : மேற்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு திருமஞ்சன சேவை

இன்று சஷ்டி விரதம். சுபமுகூர்த்த தினம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். மதுரை ஸ்ரீசொக்கநாதர் தருமிக்கு பொற்கிழியருளிய காட்சி. ராமேஸ்வரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப்பல்லக்கில் புறப்பாடு. ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீபெரியாழ்வார் புறப்பாடு. குறுக்குத்துறை ஸ்ரீமுருகப்பெருமான் புறப்பாடு. திருமாலிருஞ்சோலை ஸ்ரீகள்ளழகர் கோவிலில் ஸ்ரீசுந்தரவல்லித்தாயார் புறப்பாடு.

கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாளுக்கு காலையில் திருமஞ்சன சேவை, மாலையில் ஊஞ்சல் சேவை. கரூர் தான்தோன்றிமலை ஸ்ரீகல்யாண வெங்கட ரமண சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பெருஞ்சேரி ஸ்ரீவாகீஸ்வரர் படைவீடு ஸ்ரீரேணுகாம்பாள் புறப்பாடு. தூத்துக்குடி ஸ்ரீபாகம்பிரியாள், வீரவநல்லூர் ஸ்ரீமரகதாம்பிகை கோவில்களில் அபிஷேகம். இருக்கன்குடி ஸ்ரீமாரியம்மன் புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற ஸ்ரீபெருதிருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அமைதி

ரிஷபம்-உயர்வு

மிதுனம்-சுகம்

கடகம்-லாபம்

சிம்மம்-வரவு

கன்னி-நட்பு

துலாம்- மகிழ்ச்சி

விருச்சிகம்-நன்மை

தனுசு- பக்தி

மகரம்-வெற்றி

கும்பம்-நிறைவு

மீனம்-தெளிவு