வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 28 ஜூலை 2025

ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திரம்.திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-12 (திங்கட்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சதுர்த்தி நள்ளிரவு 1.22 மணி வரை பிறகு பஞ்சமி

நட்சத்திரம் : பூரம் இரவு 8 மணி வரை பிறகு உத்திரம்

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை

திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் சிவன் கோவில்களில் சோமவார அபிஷேகம்

இன்று சதுர்த்தி விரதம். திருவாடிப்பூரம். ஸ்ரீ ஆண்டாள் திருநட்சத்திரம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ஸ்ரீ ரங்கமன்னார் பெருந்தேரில் பவனி. தேரெழுந்தூர் ஸ்ரீ ஞானசம்பந்தர் புறப்பாடு. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வா ருக்குத் திருமஞ்சன சேவை. திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்மாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம். நத்தம் வரகுணவல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு காலை அலங்கார திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ அழகிய சிங்கர் புறப்பாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-வெற்றி

ரிஷபம்-பாராட்டு

மிதுனம்-வரவு

கடகம்-நலம்

சிம்மம்-களிப்பு

கன்னி-லாபம்

துலாம்- ஆதாயம்

விருச்சிகம்-பரிசு

தனுசு- நன்மை

மகரம்-சுகம்

கும்பம்-சுபம்

மீனம்-பெருமை