வழிபாடு

இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 24 ஜூலை 2025

ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பு சாமிக்கு பூக்களால் அலங்காரம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆடி-8 (வியாழக்கிழமை)

பிறை : தேய்பிறை

திதி : அமாவாசை நள்ளிரவு 1.48 மணி வரைபிறகு பிரதமை

நட்சத்திரம் : புனர்பூசம் இரவு 6.11 மணி வரை பிறகு பூசம்

யோகம் : அமிர்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை

சூலம் : தெற்கு

நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை

ஆடி அமாவாசை, ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம்

இன்று ஆடி அமாவாசை. ராமேசுவரம், வேதாரண்யம், திலகைப்பதி, திருவெண்காடு, திருவள்ளூர் கோவில்களில் பித்ரு தர்ப்பணம் செய்ய நன்று. திருக்கண்ணபுரம் ஸ்ரீ சவுரிராஜப் பெருமாள் ஸ்ரீ விபீஷணாழ்வாருக்கு நடையழகு சேவை காண்பித்தருளல். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் புஷ்பாங்கி சேவை. மைசூர் மண்டபம் எழுந்தருளல். வத்திராயிருப்பு சமீபம் சதுரகிரி ஸ்ரீசுந்தரமகாலிங்க சுவாமி கோவிலில் பெருந்திருவிழா. திருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் தங்க கருட வாகனத்தில் பவனி.

பதினெட்டாம்படி ஸ்ரீ கருப்பு சாமிக்கு பூக்களால் அலங்காரம். திருத்தணி ஸ்ரீ முருகப்பெருமானுக்கு பால் அபிஷேகம். சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சந்திர வல்லப்பப்பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். சுவாமிமலை ஸ்ரீ முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ஆலங்குடி ஸ்ரீ குருபகவான் கொண்டைக்கடலைச் சாற்று வைபவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ ராகவேந்திர சுவாமிக்கு குருவார திருமஞ்சனம். குறுக்குத்துறை ஸ்ரீ முருகப்பெருமான் வழிபாடு. தக்கோலம் ஸ்ரீ தட்சிணாமூர்த்தி சுவாமிக்கு அபிஷேகம்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-பக்தி

ரிஷபம்-நலம்

மிதுனம்-ஆர்வம்

கடகம்-நற்செய்தி

சிம்மம்-உதவி

கன்னி-பயணம்

துலாம்- முன்னேற்றம்

விருச்சிகம்-பரிசு

தனுசு- பாராட்டு

மகரம்-வெற்றி

கும்பம்-உழைப்பு

மீனம்-மேன்மை