மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற சுவேதாரண்யேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு நவகிரகங்களில் ஒன்றான புதனுக்கு தனி சன்னதி உள்ளது. சிவனின் 5 முகங்களில் ஒன்றான அகோர முகம், அகோர மூர்த்தியாக தனி சன்னதியில் அருள்பாலித்து வருகிறார்.
பல்வேறு சிறப்புகளை கொண்ட இக்கோவிலின் ஆண்டு இந்திர திருவிழா வருகிற 4-ந்தேதி (சனிக்கிழமை) இரவு 10 மணி அளவில் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. தொடர்ந்து 8-ந்தேதி அகோர மூர்த்தி சாமி மருத்துவ அசுரன் சம்காரம் செய்யும் நிகழ்ச்சியும், 10-ந்தேதி இரவு திருக்கல்யாணமும், 12-ந்தேதி காலை 10 மணி அளவில் தேரோட்டமும், 15-ந்தேதி இரவு தெப்பத் திருவிழாவும் நடக்கிறது.
இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி முருகன், உபயதாரர்கள், விழா குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்து வருகின்றனர்.