வழிபாடு

Indraya Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 2 செப்டம்பர் 2025: முருகன் கோவில்களில் அபிஷேகம்

கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம்.ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு ஆவணி-17 (செவ்வாய்க்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : தசமி பிற்பகல் 2.08 மணி வரை பிறகு ஏகாதசி

நட்சத்திரம் : மூலம் இரவு 9.04 மணி வரை பிறகு பூராடம்

யோகம் : அமிர்த, சித்தயோகம்

ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை

எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம்

சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல். மதுரை ஸ்ரீ சொக்கநாதர் நரிகளைப் பரிகளாக்கிய திருவிளையாடல். கடையம் ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் புறப்பாடு. தென்காசி ஸ்ரீ விஸ்வநாதர் தெப்பம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகர் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.

குரங்கணி ஸ்ரீ முத்து மாலையம்மன் பவனி. திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்ஹார அர்ச்சனை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுத வல்லித்தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உதவி

ரிஷபம்-ஜெயம்

மிதுனம்-தெளிவு

கடகம்-பண்பு

சிம்மம்-உண்மை

கன்னி-மகிழ்ச்சி

துலாம்- நிறைவு

விருச்சிகம்-லாபம்

தனுசு- களிப்பு

மகரம்-சுபம்

கும்பம்-வரவு

மீனம்-செலவு