விசுவாவசு ஆண்டு பங்குனி-12 (வியாழக்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : அஷ்டமி பிற்பகல் 2.56 மணி வரை பிறகு நவமி
நட்சத்திரம் : திருவாதிரை இரவு 7.05 மணி வரை பிறகு புனர்பூசம்
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை
எமகண்டம் : காலை 6 மணி முதல் 7.30 மணி வரை
சூலம் : தெற்கு
நல்ல நேரம் : காலை 9 மணி முதல் 10 மணி வரை, மாலை 4 மணி முதல் 5 மணி வரை
இன்று அசோகாஷ்டமி. சுவாமிமலை ஸ்ரீ முருகப் பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம். ராமகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் சிம்ம வாகனத்தில் புறப்பாடு. கணநாத நாயனார் குரு பூஜை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி வரும் காட்சி. பழனி ஸ்ரீ ஆண்டவர் உற்சவம் ஆரம்பம். புதுச்சேரி சப்பரத்தில் பவனி. வேலூர் கோட்டை துர்க்கையம்மன், கதிராமங்கலம் ஸ்ரீ வனதுர்க்கையம்மன், பட்டீஸ்வரம் ஸ்ரீதுர்க்கையம்மன் கோவில்களில் அபிஷேகம்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கந்தபரங்கி நாற்காலியிலும் ஸ்ரீ ரங்கமன்னார் அனுமன் வாகனத்திலும் புறப்பாடு. சோழவந்தான் அருகில் குருவித்துறை ஸ்ரீ சித்திர ரத வல்லபப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ குருபகவானுக்கு திருமஞ்சனம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீராமர் மூலவருக்கு திருமஞ்சனம். திருமெய்யம் ஸ்ரீ சத்தியமூர்த்தி புறப்பாடு. திருக்கோஷ்டியூர் ஸ்ரீ சவுமிய நாராயணப் பெருமாளுக்கு திருமஞ்சனம். ஸ்ரீ பெரும்புதூர் ஸ்ரீ மணவாள மாமுனிகள் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு.
மேஷம்-நன்மை
ரிஷபம்-வரவு
மிதுனம்-ஆதாயம்
கடகம்-சுகம்
சிம்மம்-பணிவு
கன்னி-புகழ்
துலாம்- தாமதம்
விருச்சிகம்-லாபம்
தனுசு- பணிவு
மகரம்-ஆதரவு
கும்பம்-வெற்றி
மீனம்-பயணம்