ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 25 மார்ச் 2026: நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-11 (புதன்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : சப்தமி மாலை 5.10 மணி வரை பிறகு அஷ்டமி

நட்சத்திரம் : மிருகசீரிஷம் இரவு 8.34 மணி வரை பிறகு திருவாதிரை

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : நண்பகல் 12 மணி முதல் 1.30 மணி வரை

எமகண்டம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை

சூலம் : வடக்கு

நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 4 மணி முதல் 5 மணி வரை

இன்று சுபமுகூர்த்த தினம், திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு, திருவல்லிக்கேணி நரசிம்ம மூலவருக்கு திருமஞ்சனம்

இன்று சுபமுகூர்த்த தினம். திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம். மதுரை ஸ்ரீ பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ராமாவதாரம். இரவு அனுமன் வாகனத்தில் பவனி. ராமாகிரி ஸ்ரீ கல்யாண நரசிங்கப் பெருமாள் உற்சவம் ஆரம்பம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ நரசிம்ம மூலவருக்குத் திருமஞ்சன சேவை. மதுராந்தகம் ஏரிகாத்த ஸ்ரீ கோதண்டராம சுவாமிக்கு திருமஞ்சன சேவை. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. ஸ்ரீரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், தேவக்கோட்டை ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீ வைகுண்டம் ஸ்ரீ வைகுண்டபதி கோவில்களில் பெருமாள் புறப்பாடு.

விருதுநகர் விஸ்வநாதர், வேதாரண்யம் திருமறைக்காடர் கோவில்களில் காலையில் அபிஷேகம், அலங்காரம். திருநெல்வேலி சமீபம் 4-ம் நவதிருப்பதி திருபுளியங்குடி ஸ்ரீ பூமிபாலகர், ஸ்ரீ புளியங்குடி வள்ளியம்மை கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை. கரூரில் அமராவதி நதியின் வடகரையில் உத்தான சயனத்தில் ஸ்ரீ அபயபிரதான ஸ்ரீரங்கநாதர் புறப்பாடு. திருப்பெருந்துறை ஸ்ரீ மாணிக்கவாசகர் புறப்பாடு. திருப்போரூர் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருநாகேஸ்வரம் ஸ்ரீ நாகநாதசுவாமிக்கு சிறப்பு வழிபாடு.

இன்றைய ராசிபலன்

மேஷம்-அன்பு

ரிஷபம்-தனம்

மிதுனம்-மாற்றம்

கடகம்-வெற்றி

சிம்மம்-கவனம்

கன்னி-ஜெயம்

துலாம்- ஊக்கம்

விருச்சிகம்-அமைதி

தனுசு- ஓய்வு

மகரம்-பரிசு

கும்பம்-பணிவு

மீனம்-நேசம்