விசுவாவசு ஆண்டு பங்குனி-10 (செவ்வாய்க்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : சஷ்டி இரவு 7.30 மணி வரை பிறகு சப்தமி
நட்சத்திரம் : ரோகிணி இரவு 10.10 மணி வரை பிறகு மிருகசீரிஷம்
யோகம் : அமிர்த, சித்தயோகம்
ராகுகாலம் : பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம் : வடக்கு
நல்ல நேரம் : காலை 8 மணி முதல் 9 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று சஷ்டி விரதம். சுவாமிமலை முருகப் பெருமான் பேராயிரம் கொண்ட தங்கப்பூ மாலை சூடியருளல். சென்னை ஸ்ரீ மல்லிகேசுவரர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் தங்க குதிரை வாகனத்தில் பவனி. நேசநாயனார் குரு பூஜை. ஸ்ரீ வாஞ்சியம் ஸ்ரீ முருகப் பெருமான் பவனி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்குத் திருமஞ்சனம். திருத்தணி, திருப்பேரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம்.
திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு, சம்கார அர்ச்சனை, ஸ்ரீ வில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள், ஸ்ரீ ரெங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல். திருநெல்வேலி சமீபம் 3-ம் நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ குமுதவல்லித் தாயார் சமேத வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம். தேவக்கோட்டை ஸ்ரீ சிலம்பணி விநாயகர், ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகர் கோவில்களில் அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி ரதோற்சவம்.
மேஷம்-நற்செயல்
ரிஷபம்-மாற்றம்
மிதுனம்-வெற்றி
கடகம்-கடமை
சிம்மம்-சிறப்பு
கன்னி-நன்மை
துலாம்- தாமதம்
விருச்சிகம்-மேன்மை
தனுசு- பாராட்டு
மகரம்-வரவு
கும்பம்-முயற்சி
மீனம்-கண்ணியம்