விசுவாவசு ஆண்டு பங்குனி-9 (திங்கட்கிழமை)
பிறை : வளர்பிறை
திதி : பஞ்சமி இரவு 9.54 மணி வரை பிறகு சஷ்டி
நட்சத்திரம் : கார்த்திகை இரவு 11.49 மணி வரை பிறகு ரோகிணி
யோகம் : மரண, அமிர்தயோகம்
ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம் : கிழக்கு
நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று கார்த்திகை விரதம். வசந்த பஞ்சமி. வேலூர் மாவட்டம் ரத்தினகிரியில் ஸ்ரீ பலமுருகனுக்கு தங்கரதக் காட்சி. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலு தர்பார் காட்சி. திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாளுக்கு திருமஞ்சனம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்கு திருமஞ்சனம். திருவிடைமருதூர் ஸ்ரீ பிருகத்சுந்தர குசாம்பாள் சமேத ஸ்ரீ மகாலிங்க சுவாமி, திருமயிலை ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர், திருவான்மியூர் ஸ்ரீ திரிபுரசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீ மருந்தீஸ்வரர், பெசன்ட்நகர் ஸ்ரீ அரளாகேசி அம்பாள் சமேத ஸ்ரீ ரத்தினகிரீஸ்வரர் கோவில்களில் சோமவார அபிஷேகம்.
கோவில்பட்டி ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் சமேத ஸ்ரீ பூவண்ணநாதருக்கு காலையில் பால் அபிஷேகம். பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. நத்தம் வரகுண வல்லித் தாயார் சமேத ஸ்ரீ விஜயாசனப் பெருமாளுக்கு திருமஞ்சனம். திருச்சேறை ஸ்ரீ சாரநாதர் புறப்பாடு. திருப்பரங்குன்றம் ஸ்ரீ ஆண்டவர் புறப்பாடு. திருவாதவூர் ஸ்ரீதியாகராஜர் புறப்பாடு. தொட்டியம் ஸ்ரீ பத்ரகாளியம்மன் திருவீதி உலா.
மேஷம்-வரவு
ரிஷபம்-தாமதம்
மிதுனம்-ஆதரவு
கடகம்-முயற்சி
சிம்மம்-வெற்றி
கன்னி-மேன்மை
துலாம்- நன்மை
விருச்சிகம்-அன்பு
தனுசு- தெளிவு
மகரம்-சிந்தனை
கும்பம்-கருணை
மீனம்-நேர்மை