ஆன்மிகம்

Today Panchangam மற்றும் முக்கிய நிகழ்வுகள்- 21 மார்ச் 2026: சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன், கோவில்களில் நடைபெறும் முக்கிய நிகழ்வுகளை விரிவாக காணலாம்.

மாலை மலர்

இன்றைய பஞ்சாங்கம்

விசுவாவசு ஆண்டு பங்குனி-7 (சனிக்கிழமை)

பிறை : வளர்பிறை

திதி : திருதியை பின்னிரவு 2.27 மணி வரை பிறகு சதுர்த்தி

நட்சத்திரம் : அசுவினி பின்னிரவு 2.55 மணி வரை பிறகு பரணி

யோகம் : சித்தயோகம்

ராகுகாலம் : காலை 9 மணி முதல் 10.30 மணி வரை

எமகண்டம் : நண்பகல் 1.30 மணி முதல் 3 மணி வரை

சூலம் : கிழக்கு

நல்ல நேரம் : காலை 7 மணி முதல் 8 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை

இன்று சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் அலங்கார திருமஞ்சன சேவை

இன்று திருநள்ளாறு ஸ்ரீ சனிபகவானுக்கு சிறப்பு அபிஷேகம். மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கல்யாணம். கம்பம் ஸ்ரீ கம்பராயப்பெருமாள் திருவீதி உலா. பத்ராசலம் ஸ்ரீ ராமபிரான் புறப்பாடு. திருப்பதி ஸ்ரீ ஏழுமலையப்பன் மைசூர் மண்டபம் எழுந்தருளல். திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் பவனி. ஆழ்வார் திருநகரி ஸ்ரீ நம்மாழ்வார் பவனி. நயினார் கோவில் ஸ்ரீ சவுந்தரநாயகி அம்மன், திருவாடானை ஸ்ரீ சிநேக வல்லியம்மன் கோவில்களில் காலையில் அபிஷேகம்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள், மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி, கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் கோவில்களில் ஸ்ரீ வரதராஜ மூலவருக்கு திருமஞ்சன சேவை. திருமோகூர் ஸ்ரீ காளமேகப் பெருமாள், ஸ்ரீ வைகுண்டபம் ஸ்ரீ வைகுண்டபதி, திருவட்டாறு ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாள், ஸ்ரீ ரங்கம் ஸ்ரீ நம்பெருமாள், திருவள்ளூர் ஸ்ரீ வைத்ய வீரராகவப் பெருமாள் கோவில்களில் அலங்கார திருமஞ்சன சேவை. உப்பிலியப்பன் கோவிலில் ஸ்ரீ சீனிவாசப் பெருமாள் ஸ்திர வார திருமஞ்சன சேவை.

இன்றைய ராசிபலன்

மேஷம்-உயர்வு

ரிஷபம்-ஆதரவு

மிதுனம்-பணிவு

கடகம்-சிறப்பு

சிம்மம்-லாபம்

கன்னி-செலவு

துலாம்- சுகம்

விருச்சிகம்-வெற்றி

தனுசு- முயற்சி

மகரம்-கவனம்

கும்பம்-நன்மை

மீனம்-கடமை