ஆன்மிக களஞ்சியம்

ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ மகிழீஸ்வரர் சாமி கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீ அனுமன், ஸ்ரீ கருடாழ்வார், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

மாலை மலர்

ஈரோடு:

ஈரோடு மாவட்டம் பவானி வட்டம் பெருந்தலையூரில் பாண்டிய, பல்லவ நாயக்க மன்னர்களால் திருப்பணி செய்யப்பட்ட ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ மகிழீஸ்வரர் சாமி கோவில் மற்றும் ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜா பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவில் மகா கும்பாபிஷேக விழா எனும் மகா ஸம்ப்ரோஷன் பெருந்சாந்தி விழா வரும் 25 ந் தேதி தனித்தனியாக நடைபெறுகிறது.

கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு ஸ்ரீ பிரஹன்நாயகி அம்பிகை சமேத ஸ்ரீ மகிழீஸ்வரர் சாமி கோவிலில் நேற்று ஸ்ரீ மங்களவாத்யம், ஸ்ரீ சுப்ர பாத சேவை, அனுக்ஞை, விஸ்வக்ஷேனர் பூஜை, லக்லோஷ்ன சுதர்ஸன ஹோமம். லஷ்மி நரசிம்ம ஹோமம், நட்சத்திர ஹோமம், தன்வந்திரி ஹோமம், தீபாராதனை, சாத்துமுறை நடந்தது.

இன்று காலை 7.35 மணிக்கு ஸ்ரீ கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு தீர்த்தம் எடுத்து வருதல், மாலை 5.30 மணிக்கு விநாயகர் பூஜை, பண்யாக வாஜனம், பஞ்ச கவ்யம், தீபாராதனை, பிரசாதம் வழங்குதல் நடக்கிறது.

23 ந் தேதி காலை 7.35 மணிக்கு தீர்த்த பூஜை, மாலை 3.30 மணிக்கு முதல்யாக பூஜை, 24 ந் தேதி காலை 7.35 மணிக்கு இரண்டாம் காலயாக பூஜை, மாலை 4.30 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜை நடக்கிறது.

25 ந் தேதி காலை 5.30 மணிக்கு கான்காம் கால யாக பூஜை, 7.30 மணிக்கு நாடி சந்தானம், ஸ்பர்சாஹூதி, காலை 8.30 மணிக்கு மகா பூர்ணாஹூதி, தீபாராதனை, 9 மணிக்கு யாத்ராதானம், கடம்புறப்பாடு, காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் ஸ்ரீ மகிழீ்ஸ்வரர், ஸ்ரீ பிரஹன்நாயகி, ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் ராஜகோபுரம் சமகால விமான கும்பாபிஷேகம், காலை 10 மணிக்கு மேல் 11 மணிக்குள் மூலவர் ஸ்ரீ மகிழீஸ்வரர், ஸ்ரீ பிரஹன்நாயகி, ஸ்ரீ சிவ சுப்பிரமணியர் மகா கும்பாபிஷேகம், மாலை 5 மணிக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது.

இதேபோல் ஸ்ரீதேவி, ஸ்ரீபூமிதேவி சமேத ஸ்ரீ வரதராஜா பெருமாள் கோவில் கும்பிஷேகத்தை முன்னிட்டு 23 ந் தேதி முதல் கால யாக பூஜை, 24 ந் தேதி 2 ம் கால யாக பூஜை, 3 ம் கால யாக பூஜை நடக்கிறது.

25 ந் தேதி காலை 4 மணிக்கு 4 ம் கால யாக பூஜை, 5 மணிக்கு ஸ்ரீ தேவி, ஸ்ரீ பூமிதேவி சமேத வரதராஜ பெருமாள் சாமி கோவில் கோபுரம், ஸ்ரீ அனுமன், ஸ்ரீ கருடாழ்வார், ராமானுஜர், திருமங்கை ஆழ்வார் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

காலை முதல் தொடர்ந்து அன்னதானம் நடைபெறு கிறது. கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை ஒருங்கி ணைப்பு குழு தலைவர் மற்றும் நந்தவனம் ஸ்ரீ கன்னிமார் டிரஸ்ட் பொருளாளர்( யான் அறக்கட்டளை) தலைவர். பிரதீப்குமார் மற்றும் விழா குழுவினர், ஊர் பொது மக்கள் செய்துள்ளனர்.