உலகம்

Iran War | பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசிய டிரம்ப் - கவனம் பெறும் அமெரிக்க தூதரின் பதிவு

நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்தார்.

மாலை மலர்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இன்று (மார்ச் 24) மாலை பிரதமர் மோடியுடன் தொலைபேசியில் பேசியுள்ளார். இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் எக்ஸ் தளத்தில் இருநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் பேசியது பற்றி பதிவிட்டுள்ளார்.

அந்த பதிவில், "மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் குறித்தும், ஹார்முஸ் நீரிணையை திறந்து வைத்திருப்பதன் முக்கியத்துவம் குறித்தும் இருவரும் பேசினர்," என தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் பிரச்சினைகளை முடிப்பது தொடர்பாக நல்ல முறையில் பேச்சுவார்த்தை நடப்பதாக அதிபர் டிரம்ப் தெரிவித்து இருந்த நிலையில், அவர் தற்போது பிரதமர் மோடியிடம் தொலைபேசியில் பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பிரிட்டனை சேர்ந்த தி ஃபைனான்சியல் டைம்ஸ் வெளியிட்ட செய்தியில், மத்திய கிழக்கில் அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் இடையிலான பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்ய பாகிஸ்தான் அரசு முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் தான் இருநாட்டு தலைவர்களின் தொலைபேசி உரையாடல் குறித்து செர்ஜியோ கோர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.