உலகம்

பசிபிக் கடலில் 6.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.

மாலை மலர்

பசிபிக் கடலின் தெற்கு பகுதியில் நேற்று இரவு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆனாலும், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கவில்லை.

நேற்று இரவு (இந்திய நேரப்படி) 8.57 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் 6.1 ரிக்டர் அளவுகோலாக பதிவானது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.