உலகம்

இந்தோனேசியாவில் நிலநடுக்கம் - ரிக்டரில் 5.4 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்

மியான்மர் நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் பீதியடைந்தனர்.

மாலை மலர்

இந்தோனேசியாவில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் வடக்கு சுமத்ராவில் காலை 8.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.4-ஆக பதிவானது.

நிலநடுக்கத்தை உணர்ந்ததும் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். மியான்மரில் சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்தோனேசியாவில் இன்று ஏற்பட்ட நிலநடுக்கத்தால் மக்கள் பீதியடைந்தனர்.