உலகம்

டோங்கா தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

டோங்காவின் நெயாபுவில் இருந்து மேற்கு திசையில் 153 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உண்டானது.

மாலை மலர்

தென் பசிபிக் பெருங்கடலில் 171 தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமான டோங்காவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. டோங்காவின் நெயாபுவில் இருந்து மேற்கு திசையில் 153 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் உண்டானது. இது ரிக்டர் அளவில் 7.6-ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 237.5 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் வீடுகள் பயங்கரமாக குலுங்கின.

இதனால் மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். நிலநடுக்கம் பூமியின் மிக ஆழமான பகுதியில் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை என்று பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்தது.