ராசிபுரம்:
ராசிபுரம் நகர விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் இன்று அம்பேத்கார் நினைவு நாளையொட்டி அம்பேத்கார் படத்தை (பிளக்ஸ்) பழைய பஸ் நிலையம் ரவுண்டானா அருகிலுள்ள பேரிகாட்டில் வைத்திருந்தனர். இதை போலீசார் அப்புறப்படுத்தியதாக கூறப்படுகிறது.
இதைக் கண்டித்து பழைய பஸ் நிலையம் ரவுண்டானா அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று காலையில் நகர செயலாளர் ஆதவன் தலைமையில் திடீரென்று சாலை மறியல் செய்தனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது. சம்பவ இடத்திற்கு ராசிபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்லமுத்து சென்று சாலை மறியல் செய்தவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அவர் தேவையான நடவடிக்கை எடுப்பதாக கூறியதின் பேரில் சாலை மறியலை கைவிட்டனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.