தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது. நடிகராக இருந்து அரசியலுக்கு வந்திருப்பதால் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.
இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய சென்னை மணலி பகுதியில் vox pop நடத்தினோம். 40 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக த.வெ.க.விற்கு 22 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர்.
அதற்கு அடுத்தபடியாக தி.மு.க.விற்கு 12 பேரும், அ.தி.மு.க.விற்கு 3 பேரும் வாக்களிப்பதாக தெரிவித்தனர். இந்த பகுதியில் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்பதாக இருவர் தெரிவித்தனர். இதர வேட்பாளருக்கு வாக்களிப்பதாக ஒருவர் தெரிவித்தார்.
இது மக்களின் மனநிலையை அறிய எடுக்கப்பட்ட ஒரு vox pop தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.