தமிழக செய்திகள்

கரூர் பெருந்துயரம்: இந்த இரவை எப்படி கடப்பது… கண்ணீர் முட்டுகிறது - மாரி செல்வராஜ் இரங்கல்!

விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

மாலை மலர்

கரூரில் வேலுசாமிபுரம் பகுதியில் தவெக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 8 குழந்தைகள் உள்பட 39 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டையே உலுக்கி உள்ள இச்சம்பவத்திற்கு அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் இரங்கலும் தங்களது கண்டனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது உயிரிழந்தவர்களுக்கு இயக்குனர் மாரி செல்வராஜ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "கரூர் பெருந்துயரம் நெஞ்சை அடைக்கிறது. இந்த இரவையும் இந்த பேரிழப்பையும் எப்படி கடப்பது …கண்ணீர் முட்டுகிறது" என்று வேதனை தெரிவித்துள்ளார்.