தமிழக செய்திகள்

விஜய் இப்போ தான் Elementary School-ல படிச்சிட்டு இருக்கார்- ஓ.பி.ரவீந்திரநாத்

வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் தாக்கம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

மாலை மலர்

சிவகங்கையில் ஓபிஎஸ்-ன் மகன் ஓ.பி.ரவீந்திரநாத் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது, வரும் சட்டமன்ற தேர்தலில் விஜயின் தாக்கம் குறித்து கேட்கப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அவர் கூறியதாவது:-

விஜய் இப்போ தான் Elementary School-ல படிச்சிட்டு இருக்காரு.

விஜய்க்கு இது முதல் தேர்தல். களம் என்றால் என்ன? தேர்தல் களம் என்றால் என்ன? என்று கத்துக்கொண்டிருக்கிறார்.

யார் களத்தில் நின்று, உண்மையான ஹீரோ யார் என்று நம் தமிழக மக்கள் இந்த தேர்தலில் வாக்களித்து நம் தளபதி அவர்களை உண்மையான ஹீரோ என்று நிரூபிப்பார்கள்.

இவ்வாறு அவர் குறிப்பிட்டார்.