தமிழக செய்திகள்

இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்கும் காரணம் - உதயநிதி

பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

மாலை மலர்

சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற மகளிர் சுய உதவிக் குழு தின விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:

* பெண் விடுதலையே மகளிருக்கான முன்னேற்றம் என முழங்கியதுதான் திராவிட இயக்கம்.

* பெண்களுக்கு சொத்தில் சம உரிமை, பெண்கள் காவல்நிலையம் என அனைத்தையும் உருவாக்கியது தி.மு.க.

* தி.மு.க. ஆட்சியில் மகளிருக்கான எண்ணற்ற திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

* இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் மகளிர் சுய உதவிக்குழுக்கள் செயல்படுகின்றன.

* மகளிர் சுய உதவிக் குழுவினரின் கோரிக்கைகள் உடனுக்குடன் நிறைவேற்றப்படுகின்றன.

* இந்தியாவில் அனைத்திலும் தமிழ்நாடு முன்னணியில் இருக்க மகளிரின் பங்கும் காரணம்.

இவ்வாறு அவர் பேசினார்.