தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | குறைந்த வேகத்தில் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி - இன்றைய நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

மாலை மலர்

தங்கம் விலை கடந்த 12-ந்தேதியில் அதிரடியாக சரிந்து வருவதை பார்க்க முடிகிறது. இப்படியாக விலை குறைந்து வந்த சூழலில், நேற்று முன்தினம் ஒரே நாளில் காலையில் சவரனுக்கு ரூ.7,600 'மளமள'வென குறைந்து, பின்னர் மாலையில் சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும். ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனை ஆனது.

இதன் தொடர்ச்சியாக 2-வது நாளாக நேற்றும் தங்கம் விலையில் ஏற்றம்-இறக்கம் காணப்பட்டது. நேற்றைய காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.340-ம். சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 720-ம் குறைந்தது. இதனையடுத்து மாலையில் திடீரென்று கிராமுக்கு ரூ.250-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரமும் உயர்ந்தது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,800 உயர்ந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.350 உயர்ந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

24-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000

23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720

22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

24-03-2026- ஒரு கிராம் ரூ.250

23-03-2026- ஒரு கிராம் ரூ.250

22-03-2026- ஒரு கிராம் ரூ.250

21-03-2026- ஒரு கிராம் ரூ.250

20-03-2026- ஒரு கிராம் ரூ.260