சர்வதேச பொருளாதாரம் மற்றும் அரசியல் சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு, உலக பங்குச்சந்தை முதலீடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில், தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது. உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான போர் காரணமாக தங்கத்தின் விலையில் தாக்கம் ஏற்பட்டுள்ளது.
சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 8 ஆயிரத்து 960-க்கும் விற்கப்பட்டது.
நேற்று காலை வர்த்தகம் தொடங்கியதும் தங்கம் விலை சரிந்தது. அதாவது கிராமுக்கு ரூ.670 குறைந்தது. தொடர்ந்து நேற்று மாலை ரூ.280 குறைந்து, அதாவது ஒரே நாளில் கிராமுக்கு ரூ.950-ம், சவரனுக்கு ரூ.7,600-ம் குறைந்தது. அதன்படி ஒரு கிராம் ரூ.12 ஆயிரத்து 670-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 1,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து நேற்று மாலை 5.30 மணிக்கு திடீரென ஒரு கிராம் ரூ.670 உயர்ந்து ரூ.13 ஆயிரத்து 340-க்கு விற்கப்பட்டது. அதாவது சவரனுக்கு ரூ.5,360 உயர்ந்தது. ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720
22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600
19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
23-03-2026- ஒரு கிராம் ரூ.250
22-03-2026- ஒரு கிராம் ரூ.250
21-03-2026- ஒரு கிராம் ரூ.250
20-03-2026- ஒரு கிராம் ரூ.260
19-03-2026- ஒரு கிராம் ரூ.265