தமிழக செய்திகள்

TN Election 2026 | மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றுமா திமுக?- மக்களின் ஆதரவு யாருக்கு?

நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனியாகப் போட்டியிடுகின்றன.

மாலை மலர்

தமிழ்நாட்டில் அடுத்த மாதம் 23-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. ஆளுங்கட்சியான தி.மு.க. தலைமையில் ஒரு கூட்டணியும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க. தலைமையில் மற்றொரு கூட்டணியும் களத்தில் உள்ளன.

இம்முறை நடிகர் விஜய் தொடங்கியுள்ள தமிழக வெற்றிக் கழகம் மற்றும் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி எந்தக் கூட்டணியும் இன்றி இந்த தேர்தலில் தனித்துப் போட்டியிடுகின்றன.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது முதல் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களின் ஆதரவு எந்தக் கட்சிக்கு அதிகம் உள்ளது என்பதை கண்டறிய ஊடகங்கள் பலவும் கருத்துக் கணிப்புகள் நடத்தி வருகின்றன.

அந்தவகையில், குன்னூர் பகுதியில் உள்ள மக்கள் மனநிலை அறிய சுமார் 40 பேரிடம் மாலைமலர் சார்பில் ஒரு ஜாலி VOX POPS எடுக்கப்பட்டது.

அதன்படி, ஆளும்கட்சியான திமுகவுக்கு 14 பேரும், விஜய்க்கு 8 பேரும், எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வுக்கு 10 பேரும், மற்றவர்களுக்கு ஒருவரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். நாம் தமிழர் கட்சிக்கு யாரும் வாக்களிக்கவில்லை.