தமிழக செய்திகள்

ப.சிதம்பரத்தின் உடல்நிலை குறித்து கேட்டறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்தார்.என் தந்தை நலமுடன் உள்ளார் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

மாலை மலர்

தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மத்திய முன்னாள் நிதி அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப. சிதம்பரம் உடல்நலக் குறைவு காரணமாக அகமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் செய்தி அறிந்து, அவரது மகனும், நாடாளுமன்ற உறுப்பினருமான கார்த்திக் சிதம்பரத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு சிதம்பரம் அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தார் என தமிழக அரசு சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றபோது சோர்வடைந்து காணப்பட்ட நிலையில், திடீரென மயக்கமடைந்ததால் நிர்வாகிகள் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

என் தந்தை நலமுடன் உள்ளார், மருத்துவர்கள் பரிசோதித்து வருகின்றனர் என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.