அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை முதல் ஏப்ரல் 1-ந்தேதி வரை தேர்தல் பிரசார சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார்.
அதன்படி, சென்னை மயிலாப்பூரில் 25-ந்தேதியும், ஆலந்தூரில் 27-ந்தேதியும், ஆர்.கே. நகர், திருவொற்றியூரில் 28-ந்தேதியும் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார்.
நாகர்கோவிலில் 29-ந்தேதியும், நெல்லை, கடையநல்லூர், கோவில்பட்டியில் 30-ந்தேதியும், சிவகாசியில் 31-ந்தேதியும், பரமக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டையில் ஏப்ரல் 1-ந்தேதியும் பிரசாரம் செய்கிறார்.