தமிழக செய்திகள்

நெல்லையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் உயிரிழப்பு

சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாலை மலர்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே தளபதி சமுத்திரம் கீ்ழூர் தேசிய நெடுஞ்சாலையில் எதிரெதிரே வந்த கார்கள் கட்டுப்பாட்டை இழந்து ஒன்றுடன் ஒன்று மோதியது.

இந்த கோர விபத்தில் பெண் உள்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் காரில் சிக்கி இருந்த 4 பேரின் உடலை மீட்டனர்.

பின்னர், அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.